குழந்தை வாய்ஸ் என்பதால் டப்பிங் பேசுவதில்லை : அனுஷ்கா !!

Read Time:1 Minute, 42 Second

அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. பல முன்னணி நடிகைகள் தங்கள் படங்களுக்கு தாங்களே டப்பிங் பேசியுள்ளனர். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கில் 45 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இதுவரையும் அவர் தனது கேரக்டருக்காக டப்பிங் பேசியதில்லை. இது குறித்து அவர் கூறியது: நான் நடிக்கும் படங்களுக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்பது எனது ஆசை. எல்லா நடிகைகளுக்கும் அந்த விருப்பம் இருக்கும்.

ஆரம்பத்தில் அதுபோல் எனக்கு தோன்றியதில்லை. ஆனால் சினிமாவில் பிரபலம் ஆனதும் நானே டப்பிங் பேச வேண்டும் என பலமுறை விரும்பி இருக்கிறேன். ஆனால் எந்த இயக்குனருமே தாங்களாக முன்வந்து என்னை டப்பிங் பேச சொன்னதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

எனது குரல் சிறுமியின் குரல் போல இருப்பதுதான், டப்பிங் பேசாததற்கு காரணம். வீட்டில் கூட, ‘குழந்தை மாதிரி பேசுறே’ன்னு கிண்டல் செய்வார்கள். அருந்ததி, பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் கம்பீரமான வேடங்களை ஏற்றேன். அதற்கு குழந்தை மாதிரி பேசினால் எப்படி இருக்கும்? அதனால்தான் டப்பிங் பேசக்கூடாது என நானே நினைத்துக்கொள்வேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணடித்ததால் பட கதையே மாறியது : பிரியா நெகிழ்ச்சி !!
Next post கேகாலை விபத்தில் பெண் ஒருவர் பலி!!