படிப்புச் சுமை அதிகமானாலும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்: ஆய்வு முடிவு

Read Time:2 Minute, 5 Second

இன்றைய குழந்தைகளுக்கு படிப்புச் சுமை அதிகம் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளாக இருந்தவர்களின் மனோபாவத்துடன் தற்போதைய குழந்தைகளின் மனநிலையை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் தற்போதைய குழந்தைகள் முன்பு இருந்ததை விட அதிக படிப்புச் சுமை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளாக இருந்தவர்களை விட மகிழ்ச்சியாகவே உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்திரேலிய குடும்ப நல அமைப்பின் ஆய்வாளர் ஆலன் கூறியது: குழந்தைகளின் மனநிலை தொடர்பான இந்த ஆய்வில் 2 – 3 வயது குழந்தைகள், 6 – 7 வயது குழந்தைகள் என இரு பிரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போதைய குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 1980 ம் ஆண்டுகளில் குழந்தைகளாக இருந்தவர்களுடன் ஒப்பிடும் போது விட தற்போதைய குழந்தைகள் பல விஷயங்களை எளிதில் புரிந்து கொண்டு விரைவாக கற்றுக் கொள்கின்றனர். எனினும் இன்றைய குழந்தைகளின் நடத்தையில் சில விரும்பத்தாகாத மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அதிகமாக அடம்பிடிப்பது, பெரியவர்களுக்கு கீழ்படியாதது போன்றவை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் சிறையில் அடைப்பு
Next post இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன!