லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 27 Second

லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில் உள்ள ஜார்ஜ் வி டாக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்திய வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் இருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள சில சாலைகளும் மூடப்பட்டன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் அனுப்பினர். இதற்கிடையே, தேம்ஸ் நதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யும் பணிகளைத் தொடங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரண்டையின் பயன்கள்!!
Next post ஆஷ்னா, அதுல்யா படத்துக்கு 19 வெட்டு !!