ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!!

Read Time:5 Minute, 47 Second

நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
வெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர்கள் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.

வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சியை போக்கும் வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும்.
உணவுக்கு சுவை தரும் இஞ்சியிலும் வெற்றிலையை போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீர் செய்கிறது.

இஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்ட செய்யும் பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி- நறுக்கியது, பெருங்காயப்பொடி, பூண்டு, சீரகம், கடுகு, புளி, நெய், வெல்லம், உப்பு. வானலியில் நெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு, சீரகம், இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சுவைக்காக உப்பு, சுண்டக்காய் அளவு புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.

இஞ்சி எச்சிலை சுரக்க செய்கிறது. மாதவிலக்கை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. வயிற்றுபுண் மற்றும் ஜலதோசத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, பேருந்து பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்தநாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இஞ்சு சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர பித்த தலைசுற்று நீங்கும். வண்டுக்கடி மற்றும் காது வலிக்கு வெற்றிலை சாறு நன்கு பயனுள்ளதாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!!
Next post இன்னமும் எண்ணப்படுகிறது ரூ.1000, ரூ.500 நோட்டுகள் : தகவல் சட்டத்தில் ரிசர்வ் வங்கி பதில்!!