ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!!

Read Time:3 Minute, 21 Second

ரயிலில் 50 லட்சத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி, இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவியது சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஜிபு டி.மேத்யூ. இவர் மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத்தில் உள்ள ரோஷன்பாக்கில் எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் ஆக உள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் விடுமுறையில் கொல்கத்தாவில் இருந்து ஊருக்கு ரயிலில் புறப்பட்டார்.

இவர் கட்டுகட்டாக பணம் கொண்டு வருவதாக கொச்சி சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இந்த ரயில் எர்ணாகுளம் வந்தவுடன் சிபிஐ அதிகாரிகள் மாறுவேடத்தில் ஜிபுவை பின் தொடர்ந்தனர். ஆலப்புழா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியவுடன் சிபிஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது பேக்ைக பரிசோதித்தபோது ரூ.500, ரூ.2000 நோட்டு கட்டுகள் மொத்தம் 50 லட்சம் ரூபாய் இருந்தது.

விசாரணையில் ஜிபு, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதை பொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றதாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்து கொச்சி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தநிலையில் பத்தனம்திட்டாவில் உள்ள ஜிபு வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில தினங்களாக சோதனை நடத்தினர்.

இதில் மேலும் பல லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு காரணமாக இருந்ததும் சிபிஐக்கு தெரியவந்தது. இதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருக்கலாம் என்றும் சிபிஐ கருதுகிறது. இந்த விவரங்களை கொச்சி சிபிஐ அதிகாரிகள் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். உள்துறைக்கு கிடைத்ததும் ஜிபு பணிபுரிந்த ரோஷன்பாக் பகுதிக்கு ெசன்று விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!!
Next post ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!!