தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதி: மத்திய அரசு அறிவிப்பு!!

Read Time:1 Minute, 35 Second

தமிழகத்தில் 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் முன்வைத்த கேள்விக்கு, மத்திய மந்திரி அனுப்பிரியா பட்டேல் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு 165 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக 120 கோடியும், திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக்கு 45 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கர்ப்பிணி அல்லாத பெண்களுக்கு ரத்த சோகை நோய்தாக்கம் அதிகம் உள்ளது. கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு ரத்த சோகையால் அதிகளவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் எந்த மருத்துவமனையிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்கலன் மோதியதில் ஒருவர் பலி!!
Next post 24 இலட்சம் பெறுமதியுடைய தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட பெண் கைது!!