மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: இந்தியாவை புறக்கணித்து சீனாவுக்கு தூதுவிட முடிவு!!
மாலத்தீவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தூதரை அனுப்ப போவதில்லை எனவும் கூறியுள்ளார். மாலத்தீவில் தண்டிக்கப்பட்டு உள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என கடந்த 1-ந் தேதி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதை மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாலத்தீவு விவகாரத்தில் இந்திய ராணுவ உதவியை மற்றொரு முன்னாள் அதிபர் முகமது நஷீத் நாடி உள்ளார். ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்கிடையே முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்டவர்களின் தண்டனையை ரத்து செய்ததை சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய 3 நீதிபதிகள் அமர்வு விலக்கிக்கொண்டது. இதை அதிபர் யாமீன் அப்துல் கயூம் வரவேற்று உள்ளார். மாலத்தீவில் ஏற்பட்ட அதிகார மோதலில், அதிபர் யாமீன் கை தற்போது ஓங்கி இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், மாலத்தீவில் தற்போது இருக்கும் சூழல் குறித்து தனது நேச நாடுகளுக்கு தகவல் தெரிவிக்க அதிபர் யாமீன் முடிவு செய்துள்ளார். இதன்படி, நட்பு நாடுகள் என மாலத்தீவு அறிவித்துள்ள பட்டியலில் இந்தியாவுக்கு இடம் இல்லை. சீனா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தூதர்கள் சென்று மாலத்தீவின் நிலவரம் பற்றி தகவல் தெரிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு , நட்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்காமல் அறிவித்து இருப்பது, சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீனா அறிவித்த சில மணி நேரங்களில் மாலத்தீவு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating