ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை!!

Read Time:1 Minute, 30 Second

ஜனாதிபதி செயலாக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது 179 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபரான ஜனாதிபதி செயலாக காரியாலயத்தின் முன்னாள் கணக்காளர் எல்.பீ. குணரத்னவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை நாளைய தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!!
Next post 160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!!