வழுக்கை தலையில் முடி வளர்த்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!!

Read Time:2 Minute, 3 Second

தலை வழுக்கை விழுந்த பலர் முடி இல்லையே என கவலை அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க முடியை நடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மீண்டும் முடியை வளர்க்க அதிகளவில் செலவு செய்வதுண்டு. ஆனால் அதற்கு போதுமான பலன் கிடைப்பதில்லை. இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழுக்கை விழுந்தவர்களுக்கு முடியை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஜேர்னல் பயோமெட்டிரியல் என்ற இதழில் வெளியாகியுள்ள கட்டுரை: ஜப்பானின் யோகஹாமா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் புஞ்ஜி புகுடா தலைமையிலான குழு சில நாட்களிலேயே 5 ஆயிரம் முடிகளை பயிரிடும் முறையை கண்டறிந்துள்ளனர்.

இதற்காக மனித தலை போன்ற தோற்றமுடைய டைமீத்தைல் பாலி சிலிகான் என்ற பிளேட் மீது முடியை வளர்த்து அவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் ஒரே நேரத்தில் 50 முடிகள் வரை வளர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு வளர்ந்த முடிகளை பறித்து எலிகள் மீது நட்டு முடி வளர்கிறதா என சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் புற்றுநோயால் முடியை இழந்தவர்கள் மற்றும் பிற மருத்துவ பிரச்னையால் முடியை இழந்தவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இது அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உல்லாசத்துக்கு அழைப்பு!!
Next post ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை!!