துபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது!!
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமான இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் இருந்தபோது, இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலியின் குடும்பத்தினருக்கு இவர்களின் விஷயம் அரசல் புரசலாக தெரிந்து, வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து ஆர்.கே.க்கு தகவல் தெரிவித்துள்ளார் காதலி. இதனால், தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் தாய் நாடு செல்வதற்காக விடுமுறையும், தன்னுடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரியும் கேட்டுள்ளார்.
ஆனால், ஒப்பந்தக் காலத்தில் விதிமுறைகளின்படிதான் அனுமதி அளிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. இதனால் எப்பாடுபட்டாவது தமிழகத்துக்கு சென்றுவிடுவது என்று தீர்மானித்து, சம்பவ தினத்தன்று, உடமைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல், பர்ஸ்சை மட்டும் எடுத்துக் கொண்டு துபாய் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் பார்க்காத சமயத்தில் வேலியை தாண்டிக் குதித்து விமானங்கள் நிற்கும் இடத்தை நோக்கி ஓடியுள்ளார். ஏதாவது ஒரு விமானத்தில் ஏறி, தமிழகத்துக்கு சென்றுவிடுவது மட்டும்தான் அவரது இலக்காக இருந்துள்ளது.
அவரது போதாத காலம், பெட்டிகளை ஏற்றி, இறக்கும் ஊழியர் ஒருவர் ஆர்.கே.யை பார்த்துவிட்டார். இதுகுறித்து அவர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் ஆர்.கே.யை கைது செய்தனர். அப்போது பர்ஸ்சில் இருந்த தன்னுடைய காதலி படத்தை காட்டி, அவளுக்கு திருமணம் ஆகப்போவதையும், இதனால் தான் தமிழகத்துக்கு சென்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவர் கூறியது அனைத்தும் உண்மை என்று தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் வெளியே செல்ல அனுமதித்தனர். ஆனால், இனி இதுபோன்று நடக்கக்கூடாது என்றும் எச்சரித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating