பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் இந்தியாவில் அதிகரிக்கும் எச்,ஐ.வி : 6வது இடத்தில தமிழகம் !!

Read Time:1 Minute, 58 Second

இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையிலான ரத்த பரிமாற்றத்தால் 2007ம் ஆண்டிலிருந்து 20,600 பேருக்கு எச்,ஐ.வி நோய் கிருமி பரவியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பங்கர்மாவ் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் ஒரே ஊசியை ஏராளாமானோருக்கு பயன்படுத்தியதால், 58 பேருக்கு எச்,ஐ.வி நோய் கிருமி பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி மருத்துவரின் செயலால் அந்த பகுதியைச் சேர்ந்த 5000 பேர் அச்சத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இதை தொடர்ந்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் குறித்து 2007ம் ஆண்டு முதல் இதுவரை வரை 20,592 எச்,ஐ.வி நோய் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக குஜராத்தில் 4,093 பேர் எச்,ஐ.வி நோய் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் 2,358 பேரும், டெல்லியில் 1,563 பேரும் எச்,ஐ.வி நோய் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில உள்ளது.பாதுகாப்பற்ற ரத்த பரிமாற்றத்தால் 1,134 பேர் எச்,ஐ.வி நோய் கிருமி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே மிகப்பெரிய பால்கன் ஹெவி ராக்கெட்: காருடன் விண்ணில் பாய்ந்தது!!
Next post உல்லாசத்துக்கு அழைப்பு!!