மத்திய அமைச்சரவையில் முடிவு 8 கோடி பேருக்கு இலவச காஸ்!!

Read Time:1 Minute, 48 Second

ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு தரும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகள் இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் ‘ உஜ்வாலா யோஜனா’வை பிரதமர் மோடி 2016ம் ஆண்டு மே முதல் தேதி அறிவித்தார். இத்திட்டத்தில் ஏழை பெண்களுக்கு முன்வைப்பு தொகை இல்லாமல் காஸ் இணைப்பு தரப்படும்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு டெல்லியில் நேற்று கூடியது.

அதில், இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை இலக்கை 8 கோடியாக உயர்த்தவும், அதற்கு கூடுதலாக ரூ.4,800 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இலக்கை 2020க்குள் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் 2017-18ல் 3 கோடி இணைப்புகள் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 3,35 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டன. 24 புதிய மருத்துவ கல்லூரி: இதேபோல், மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 24 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது உள்பட 14,930 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவை தேனிலவு!!
Next post இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!