தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா !!

Read Time:1 Minute, 49 Second

ராஜ்கிரண், ரேவதி நடித்த பவர் பாண்டி படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். எனைநோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் புதியபடத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தனுஷே நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரை நடிக்க வைக்க எண்ணினார்.

சிரஞ்சீவியை இப்பாத்திரத்தில் நடிக்க கேட்டு தனுஷ் தரப்பில் அணுகப்பட்டது. ஆனால் தற்போது அவர் தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருவதாலும், அதன் படப்பிடிப்பு முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்பதாலும் உடனடியாக கால்ஷீட் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து நாகார்ஜூனாவை நடிக்க கேட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாகார்ஜூனா ஏற்கனவே ரட்சகன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். 2 வருடங்களுக்கு முன் கார்த்தியுடன் தோழா என்ற தமிழ் படத்தில் நடித்தார். மீண்டும் தனுஷ் படம் மூலம் தமிழில் நடிக்க உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்!!
Next post ஹீரோக்களை அதிர வைத்த அனுஷ்கா!!