ரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம்? புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு !!

Read Time:2 Minute, 23 Second

ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. கடந்த சில வருடங்களாக அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி ஜோடியாக நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட மொழியில் 2 படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ரஷ்ய வாலிபர் ஒருவரை ஸ்ரேயா காதலிப்பதாகவும், வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் பரவியது.

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது ரஷ்யாவை சேர்ந்த வாலிபரை ஸ்ரேயா சந்தித்ததார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவரம் இருகுடும்பத்தாருக்கும் தெரியவர அவர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர், வரும் மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், நகைகள் ஆர்டர் செய்திருக்கிறாராம்.

இதுபற்றி ஸ்ரேயா கூறும்போது,’ நான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வரும் தகவல் தவறு’ என குறிப்பிட்டார். மேலும் இதுகுறித்து ஸ்ரேயாவின் தாயார் நீர்ஜா கூறும்போது,’ஸ்ரேயா பற்றி வரும் தகவல்கள் வதந்திதான். ராஜஸ்தானில் நடக்கவிருக்கும் தோழி ஒருவரின் திருமணத்தில் ஸ்ரேயா பங்கேற்க உள்ளார். அதற்காக புதிய ஆடைகளும், நகைகளும் ஆர்டர் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் உறவினர் திருமண விழா ஒன்றிலும் அவர் கலந்துகொள்ள விருக்கிறார். வரும் மார்ச் மாதம் இந்த திருமணங்கள் நடக்கவிருக்கிறது. வதந்தி பரவியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம் !!
Next post தேவை தேனிலவு!!