ரீமேக்கில் நடிக்கமாட்டேன் : கேத்ரின் தெரசா கோபம் !!

Read Time:2 Minute, 7 Second

மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது கலகலப்பு 2ம் பாகம், கதாநாயகன் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர் தமிழில் அதர்வா ஜோடியாக கணிதன் படத்தில் நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றதால் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சு நடந்தது. தெலுங்கில் உருவாகவிருக்கும் இப்படத்தில் கேத்ரின் தெரசாவே ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இதை கேத்ரின் தரப்பு மறுத்துள்ளது.

கணிதன் ரீமேக்கில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. அது வெறும் வதந்திதான் என்று கேத்ரின் தெரிவித்திருக்கிறார். தமிழில் இப்படம் வெளியானபோது தனது காட்சிகள் நிறைய வெட்டப்பட்டுவிட்டது, அதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் எனது நடிப்பு அப்படத்தில் பாராட்டு பெற்றது. தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எனது காட்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதில் நடிப்பதுபற்றி ஆலோசிப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார். தயாரிப்பு தரப்பும் கேத்ரின் கூறுவதை ஏற்று அவரது காட்சிகளை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்களாம். கேத்ரினுக்கு சமீபத்தில் ஹிட் படம் எதுவும் அமையாத நிலையில் மீண்டும் ஹிட் படம் தர வேண்டும் என்று எண்ணி உள்ளார். இப்படம் அவருக்கு ஹிட்டாக அமைய வாய்ப்புள்ளதாக பட தரப்பினர் கூறிவருகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
Next post ரஷ்ய காதலருடன் ஸ்ரேயா திருமணம்? புத்தாடை, நகைகள் ஆர்டர் செய்ததால் பரபரப்பு !!