தடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது!!

Read Time:3 Minute, 51 Second

துருக்கியில் பயன்படுத்தி வந்த ‘லிரா’ ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கிருக்கும் தொழில் அதிபர்கள், இடைத்தரகர்களை வைத்து, துருக்கி ரூபாய் நோட்டை இந்தியாவில் விற்பனை செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை பயன்படுத்தப்படுவதாக பெங்களூரு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துருக்கி நோட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில் ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் இருக்கும் வியாபாரிகளிடம் டிப் டாப்பாக வந்த வாலிபர் ஒருவர், துருக்கி நோட்டுகள் இருப்பதாக கூறி அதனை விற்பனை செய்ய முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் ரகசியமாக முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சாலையோரங்களில் இருக்கும் வியாபாரிகளிடம், துருக்கி ரூபாய் நோட்டுகளை காண்பித்து, 200 கோடி மதிப்புள்ள இந்த நோட்டை 30 லட்சத்திற்கு தருகி–்றேன் என்று கூறியுள்ளார். ஆனால் இதனை எந்த வியாபாரிகளும் நம்பவில்லை. மாறாக போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் வாலிபரை ஆதாரத்துடன் பிடிப்பதற்கு திட்டமிட்டனர். இதற்காக ஆர்.எம்.சி.யார்டு போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போன்று அனுப்பி வைத்து, வாலிபரிடம் பணத்தை வாங்கச் செய்தனர். அப்போது வாலிபர் தன்னிடம் இருந்த துருக்கி ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு, இந்திய ரூபாய் நோட்டை வாங்க முயன்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மைசூருவை சேர்ந்த திபேஷ் (28) என்று தெரியவந்தது.

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே அவுட்டில் வசித்து வந்த இவர், பெள்ளந்தூரில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரமாக துருக்கி ரூபாய் நோட்டுகளை பெங்களூருவில் விற்பனை செய்து, பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜன.22ம் தேதி முதல் தினமும் யஸ்வந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கு அருகே வியாபாரிகளை குறி வைத்து, துருக்கி ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். சோதனையில் கைதான திபேஷிடமிருந்து 200 கோடி மதிப்பிலான துருக்கி ரூபாய் நோட்டுகள் 100 லிராக்களை போலீசார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!
Next post கற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு !!