சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!

Read Time:2 Minute, 24 Second

மைசூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் அம்ஜத் பாஷா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது அண்ணனும், அண்ணியும் இறந்து விட்டனர். இதையடுத்து அவர்களின் ஒரே மகளான ஆயிஷாவை (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) தனது வீட்டில் வளர்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மூட்டை பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் எனக்கூறி ஆயிஷா தவிர குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

குடும்பத்தினர் வெளியேறியதும் ஆயிஷாவை தனது வீட்டில் வைத்து அம்ஜத் பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் சிறுமியை அவர் மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் மவுனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அம்ஜத் பாஷா, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இவரது தொந்தரவு தாங்காமல் அக்கம்பக்கத்தில் உள்ள சில பெண்களிடம் ஆயிஷா தெரிவித்துள்ளார். அவர்கள் அம்ஜத் மீது ஆர்டி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் அம்ஜத் பாஷாவை கைது செய்து அவர் மீது சிறுவர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி வனமாலா யாதவ் விசாரித்து வந்தார். எனினும் ஆயிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படவில்லை. பாலியல் தொல்லை கொடுத்து வந்தது மட்டும் உறுதி செய்யப்பட்டதால் அம்ஜத் பாஷாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளான் ருசித்தால் நோய் விலகிப்போகும்!!
Next post தடை செய்யப்பட்ட துருக்கி பணத்தை விற்க முயன்ற இன்ஜினியர் கைது!!