ஹீரோக்களை அதிர வைத்த அனுஷ்கா!!

Read Time:2 Minute, 46 Second

ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா, வித்யாபாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள்தான் பிரதானமாக நடிக்கின்றனர். இவர்களில் அனுஷ்கா முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கிறார். பாகுபலி படம் ஹிட்டானாலும் அதில் பிரபாஸ், ராணா என நடிகர்கள் ஃபோக்கஸ் அதிகம் இருந்தது. எனவே அப்படம் அனுஷ்காவின் சோலோ ஹீரோயின் பட லிஸ்டில் இடம் பெறவில்லை. இப்படத்தையடுத்து அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பாகமதி, வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூலை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறதாம். இப்படத்துக்கு போட்டியாக வெளியான 2 ஹீரோக்கள் படம் வசூல் ஈட்டவில்லை.

சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு வரும் வசூல்போல் அனுஷ்காவின் படத்துக்கு வசூல் குவிந்துகொண்டி ருப்பதை கண்டு பல ஹீரோக்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருப்பதுடன் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. ‘பாகமதிதான் கடைசி படம். அத்தோடு திருமணம் செய்துகொண்டு அனுஷ்கா செட்டிலாகிவிடுவார். பிறகு நம்ம ராஜ்ஜியம்தான்’ என எண்ணிக்கொண்டிருந்த சில ஹீரோயின்களும் தற்போது பதற்றம் அடைந்திருக்கின்றனர். போகிற போக்கை பார்த்தால் அனுஷ்காவுக்கு இப்போது திருமணம் நடக்கும் என்று தோன்றவில்லை.

ஒரு படத்துக்கு 3 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் அவருக்கு அடுத்தகட்டமாக எத்தனை கோடி சமபளம் உயரும் என்பது இனிதான் தெரியவரும். திரையுலகில் உலவும் கிசுகிசுப்படி பிரபாஸே அனுஷ்காவை கல்யாணம்கட்ட சம்மதித்தாலும் அனுஷ்கா அதை தள்ளித்தான்போடுவார் என்கின்றனர். சமீபத்தில் பாகமதி படத்தை பார்த்த ரஜினிகாந்த், அனுஷ்காவை அழைத்து பாராட்டினாராம். ஏற்கனவே ரஜினியுடன் லிங்கா படத்தில் அனுஷ்கா இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜூனா !!
Next post துபாய் விமான நிலையத்தில் சுவாரசியம் காதலியை பார்க்க கள்ளத்தனமாக விமானம் ஏற வந்த இந்தியர் கைது!!