10, 11ம் தேதிகளில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!

Read Time:2 Minute, 12 Second

வரும் 10, 11ம் தேதிகளில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். தற்போது வரும் 10, 11ம் தேதிகளில் 2வது முறையாக அவர் இந்நாடுகளுக்கு பயணம் செல்கிறார்.

இது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின்போது துபாயில் நடைபெற உள்ள 6வது உலக அரசு கூட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மோடியின் பயணம் குறித்து ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது: பிரதமர் மேற்கொள்ளும் இந்த பயணம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் உறவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. கடந்த 2017ல் இந்திய குடியரசு தினத்தில் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் கலந்து கொண்டதை தொடர்ந்து இப்போது இந்த பயணம் நடைபெறுகிறது.

தனது பயணத்தின் இடையில் துபாயின் ஓபரா ஹவுசில் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் சந்திக்க உள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீடுகள் ஏற்கனவே உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பயணத்தின்போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலுக்கு மோடி செல்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை திவ்யா உண்ணி 2வது திருமணம் : அமெரிக்கவாழ் கேரள இன்ஜினியரை மணந்தார்!!
Next post இந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு!