ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் சிங்கப்பூர் அரசு வெளியீடு!!

Read Time:1 Minute, 46 Second

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய் ஆகியவற்றுடன் தமிழ் நான்காவது ஆட்சி மொழியாக உள்ளது. அரசின் பொது அறிவிப்புகள் இந்த நான்கு மொழியிலும் வெளியிட வேண்டும். தமிழில் வெளியிடுவதற்கு மொழி பெயர்ப்பு செய்ய சுமார் 4 ஆயிரம் ஆங்கில சொற்றொடர்களுக்கு சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டுள்ளது.

200 பக்கங்கள் அடங்கிய இந்த சொற்களஞ்சியத்தில் ஆங்கில எழுத்து ஏபிசி வரிசையில் அரசு அமைப்பின் பெயர்கள், கல்வி சம்பந்தப்பட்ட சொற்கள், சட்டப் பிரிவுகளின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம்-தமிழில் இது போன்ற சொற்களஞ்சியம் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இந்த சொற்களஞ்சியத்தை தேசிய மொழி பெயர்ப்பு கமிட்டியின், தமிழ் அறிஞர்கள் குழு, தமிழ் மொழி கவுன்சில் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து தயாரித்துள்ளன. இவை பொது அறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகத்துறையினர், தமிழ் மொழி கற்பவர்களுக்கு உதவும். இ்தை சிங்கப்பூரில் இந்திய பாரம்பரிய மையத்தில் தகவல் தொடர்புத்துறை மூத்த அமைச்சர் சீ லாங் டாட் வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண போட்டோஷுட்டிற்கு ரெடி…!
Next post கற்றுக்கொண்டால் குற்றமில்லை!!