அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 2 ஹெலிகாப்டர் மோதல்: 6 பேர் பலி

Read Time:2 Minute, 17 Second

அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற இரண்டு மருத்துவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஏர் மெத்தட்ஸ் என்ற நிறுவனத்தின் மருத்துவ ஹெலிகாப்டரும், கிளாசிக் ஹெலிகாப்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மருத்துவ ஹெலிகாப்டரும் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு ஃபிளாக் ஸ்டாஃப் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு தரை இறங்க முற்பட்ட போது ஒன்றுக்கொன்று மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் ஏர் மெத்தட்ஸ் மருத்துவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். இவர்களில் ஒருவர் நோயாளியாவார். இதே போன்று கிளாசிக் ஹெலிகாப்டர்ஸ் மருத்துவ ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். நர்ஸ் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து நேர்ந்த போது மருத்துவ நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த இருவர் காயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். ஃபிளாக் ஸ்டாஃப் மெடிக்கல் சென்டர் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஊழியர்களை கொண்டிருக்கவில்லை என்றும் இதனால் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின என்றும் கிளாசிக் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மட் ஸ்டெயின் தெரிவித்தார். ஹெலிகாப்டர் விபத்து நேர்ந்த இடம் காட்டுப்பகுதி என்பதால் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த புதர்கள் தீயில் எரிந்து போயின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் விமான சாகச காட்சி நடைபெற இருந்த இடத்தில் கோபுரம் விழுந்து சிறுவன் பலி
Next post சந்தேகத்தின் பேரில் தமிழர் இருவர் கைது