அதிகாலை உடற்பயிற்சி உடலை உறுதியாக்கும்!!

Read Time:2 Minute, 37 Second

ஒரு நாளை உற்சாகமாக துவங்குவது இனிது! தொடக்கம் சிறப்பாக இருந்தால், அன்றைய தினமே மகிழ்ச்சிகரமாக இருக்கும். நாள் முழுக்க உடலும், மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உதவுவது உடற்பயிற்சி. `உடற்பயிற்சி செய்யவேண்டுமா..’ என்கிற சலிப்போடு செய்யாமல், ஆர்வத்தோடு சில பயிற்சிகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் வகையில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

வாக்கிங், ஜாக்கிங், ஓட்டப்பயிற்சி, யோகா பயிற்சி என அவரவர் விருப்பப்படி, உடல் தகுதிக்கு ஏற்றபடி உடற்பயிற்சி செய்யலாம். அதிகாலை உடற்பயிற்சியின் பலன்கள் இங்கே… சீரான இதய துடிப்புக்கு உதவும். உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரும். உடல் வடிவமைப்பை மேம்படுத்தும். இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து, பிட் ஆக்கும்.

கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும். உடலில் அதிகமாக உள்ள கலோரியின் அளவை குறைக்கும். கால் மற்றும் முட்டியின் வலிமை அதிகரிக்கும். கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும். கைகளில் உள்ள தசைகள் உறுதியாகும். தோள்பட்டை உறுதியாகும். முழு உடலுக்கு அசைவு ஏற்படுவதால், உடலில் நிலைத்தன்மை மேம்படும். உடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதைப்பகுதி குறையும்.

தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும். வயிறு, மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்பு கரையும். மார்பு தசைகள் வலுவடையும். கால்களில் சீரான ரத்த ஓட்டம் பாயும். இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். மொத்தத்தில் உடல் உறுதியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)6 அத்தியாயம்!!
Next post கண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி!!