ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான பொன்விதிகள்!!

Read Time:6 Minute, 12 Second

மைக்கேல் போலன்ஸ், அமெரிக்காவின் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளர். குறிப்பாக, உணவுத் துறையில் போலன்ஸ் எழுதிய நூல்களும் அது சார்ந்த அவரது பேச்சுக்களும் முக்கியமானவை. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றியும் உணவு நிறுவனங்களின் வணிக நோக்கங்கள் பற்றியும் தொடர்ந்து மக்களிடம் பேசிவருபவர். உலகம் முழுக்க இருக்கும் உணவியல் நிபுணர்கள், மருத்துவர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் போலன்ஸ் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான பொன்விதிகள் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதில் நம் ஊருக்குப் பொருத்தமான சில இதோ…

+ .உங்கள் முன்னோர்கள் உணவு என்று உண்ணாத எதையும் நீங்களும் உண்ணாதீர்கள்.

+. அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் பின்பற்றும் உணவுகளை உண்ணுங்கள். வித்தியாசமாக உண்கிறேன் என்று கண்டதையும் சாப்பிடாதீர்கள்.

+.சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக, ஹைஃப்ரெக்டோஸ் சிரப் இருக்கும் உணவைத் தவிர்த்திடுங்கள். உப்பிடம் உஷாராக இருங்கள்.

+.உணவுக்கான மூலப்பொருட்களில் முதல் மூன்று இடத்தில் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்கள் இருந்தால் அதைத் தவிர்த்திடுங்கள்.

+.ஐந்து மூலப்பொருட்களுக்கு மேல் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பேக்கிங் உணவுப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள்.

+.உங்கள் குழந்தையால் உச்சரிக்க முடியாத விநோதமான இன்க்ரிடியண்ட்ஸ் உள்ள பொருளை உண்ணாதீர்கள்.
+.. Lite, lowfat, nonfat போன்ற பதங்கள் இருந்தால் அந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

+.இருக்கவே வாய்ப்பற்ற ஒன்றை இருப்பதாகச் சொல்லும் உணவைத் தவிர்த்திடுங்கள். உதாரணம்: வைட்டமின் டி உள்ள எண்ணெய். வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கும். வேறு எந்த உணவிலும் கிடையாது.

+சூப்பர் மார்க்கெட்டின் மத்திய பகுதியில் உள்ள உணவுப் பொருட்களை வாங்காதீர்கள். காய்கறிகள், கீரைகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் பெரும்பாலும் விளிம்புப் பகுதியிலேயே இருக்கும். செயற்கையான இன்க்ரிடியண்ட்ஸ் நிறைந்த உணவுப் பொருட்கள்தான் சூப்பர் மார்க்கெட்டின் மையத்தில் இருக்கும்.

+மட்கும் வாய்ப்புள்ள உணவுப்பொருட்களை மட்டுமே உண்ணுங்கள்.

+இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட
உணவுகளை வாங்காதீர்கள்.

+ஒரு உணவுத் தொழிற்சாலையில் அனைத்துப் பணியாளர்களுமே சர்ஜ்ஜிக்கல் தொப்பி அணிந்துதான் பணியாற்றுவார்கள் எனில் அந்த உணவை சந்தேகப்படுங்கள்.

+தாவரத்திலிருந்து நேரடியாக வந்த பொருள் என்றால் சாப்பிடுங்கள். அந்தத் தாவரத்தைக் கொண்டு ப்ராசஸ் செய்யப்பட்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் தவிர்த்திடுங்கள்.

+எல்லா மொழியிலும் ஒரே பெயரால் விளிக்கப்பட்டால் நிச்சயம் அது உண்ணத் தகுந்த
உணவுப் பொருள் அல்ல. உதாரணம்: சீட்டோஸ், பிக் மாக், ப்ரிங்கில்ஸ்.

+நான்கு காலில் நிற்கும் உயிர்களைவிட (ஆடு, மாடு, பன்றி) இரண்டு காலால் நிற்கும் உயிர்கள் (கோழி, காடை) உண்ணச் சிறந்தவை. இந்த இரண்டையும்விட ஒற்றைக்காலில் நிற்கும் உயிர்கள் (தாவரங்கள்) மேலும் சிறந்தவை. ஒற்றைக் காலை அதிகமாகவும் இரட்டை கால்களை ஓரளவும் நான்கு கால்களை குறைவாகவும்
உணவில் பயன்படுத்துங்கள்.

+உங்கள் வண்ணத்தில் உள்ள காய்கறி
களைத் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.

+நன்கு உண்ணும் விலங்குகளையே நீங்கள் உண்ணத் தேர்ந்தெடுங்கள்.

+அனைத்துண்ணி போல் இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் எதையும் விலக்காமல் உண்ணுங்கள்.

+காட்டில் விளைந்த உணவுகளைத் தவிர்க்காமல் உண்ணுங்கள்.

+உங்கள் உணவில் தேவையான
இனிப்பையும் உப்பையும் நீங்களே இடுங்கள்.

+உணவு எவ்வளவு வெள்ளையாக இருக்கிறதோ; பிரச்சனை அவ்வளவு துலக்கமாக இருக்கும். எனவே, வெள்ளை உணவுகள் உஷார். உதாரணம்: பாலிஷ் அரிசி, சர்க்கரை, உப்பு.

+ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட ஆசைப்பட்டால் அதை நீங்களே தயாரித்து உண்ணுங்கள்.

+பாரம்பரிய உணவுகளில் ஆர்வம் காட்டுங்கள். அது எந்தப் பாரம்பரியமாக இருப்பினும் பரவாயில்லை.

+சிறிய தட்டுகளில் உணவை நிரப்பி
உண்ணுங்கள்.

+காலை உணவை அரசனைப் போலவும் மதிய உணவை குடும்பஸ்தனைப் போலவும் இரவு உணவை யோகியைப் போலவும் சாப்பிடுங்கள். அதாவது காலை அதிகமாகவும் மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் சாப்பிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புறக்கணிப்பின் வலி!
Next post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 13.!!