சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்!!

Read Time:4 Minute, 22 Second

வயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்… என்ன ஒரு சுகம் தெரியுமா… என்று லயித்துப்போய் சொல்பவர்கள் பலர் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். “உணவின் தன்மையை பொறுத்து செரிமானத்துக்கான நேரமும் மாறுபடும். சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் ஆவதற்கு முன்னர், சில விஷயங்களை செய்யக்கூடாது. அதன் விவரம் இதோ…
* சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமான பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்கு செல்லும். தூங்கும்போது, குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, நெஞ்செரிச்சல், மூச்சுக்குழாய் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்னை, ஸ்லீப் ஆப்னியா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.

* நம் உடலை பொறுத்தவரையில், சாப்பிட்ட உடனேயே செரிமான பணிகள் துவங்கிவிடும். பொதுவாகவே குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் (தோலுக்கு அருகிலுள்ள பகுதிகளில்) சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும். அந்த வகையில், வயிற்று பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாக செல்லும்போது, செரிமான பணிகள் பாதிக்கப்படும். வயிற்று பகுதியில் எப்போதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இல்லையேல், செரிமான பணியின் வேகம் குறைந்துவிடும்..
* ஒவ்வொரு பழ வகைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு போன்றவற்றோடு பழங்களில் இருக்கும் வேறு சத்துகளும் சேரும்போது, செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னை ஏற்படக்கூடும். உணவுக்குப்பின் பழங்கள் சாப்பிட்டால், உணவின் மேல் அது அமர்ந்துக்கொள்வது மாதிரியான நிலை ஏற்பட்டுவிடும். இது, செரிமானத்தை தாமதப்படுத்த துவங்கும். பழங்களை விரும்பி சாப்பிடுவோர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரோ, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தோ, சாப்பிடலாம்.

* புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கை தோன்றும். புகைபிடிப்பதே கேடு… அதிலும் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது இன்னும் அதிக தீங்கை விளைவிக்கும். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்கு சமம் என்கிறது சமீபத்திய ஆய்வு.
* கடுமையான வேலைகள் செய்யக்கூடாது. அப்படி செய்தால், செரிமானத்துக்கு தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்க போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்து சக்தியும் வெகு எளிதாக குறைந்துவிடக்கூடும் என்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வெகுதூரம் நடப்பது, வியர்வை வரும் அளவுக்கு வீட்டு வேலை செய்வது போன்றவற்றை செய்யக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாய்பிரண்ட்களுடன் எமி நைட் பார்ட்டி!!
Next post முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்!!