மஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்!!

Read Time:4 Minute, 3 Second

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்திடும் பற்களின் கறையை போக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக போக்கலாம்.

கொய்யா: கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் இரண்டுமே பற்களின் கறையை போக்கிடும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதே போல கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனைக் கொண்டு வாயை கொப்பளித்து வாருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரியில் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதனை ஒரு கைப்பிடியளவு, எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை பல் விளக்கியவுடன் ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு லேசாக தேய்த்திடுங்கள். பத்துநாட்களுக்கு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் : தினமும் கற்றாழை ஜெல் கொண்டு பற்களை தேய்த்திடுங்கள். இதனால் பற்களில் உள்ள கறை மறைவதுடன் வாய் துர்நாற்றமும் வராது.

கிராம்பு : ஒரு டீ ஸ்பூன் கிராம்பு பொடியுடன் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்திடுங்கள். சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து விடுங்கள். ஆரஞ்சு பழத்தோல் : இரவு படுப்பதற்கு முன்பாக இதனைச் செய்ய வேண்டும்.

ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்த்துவிடுங்கள். இதனை தேய்த்தப்பிறகு வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. பின்னர் மறு நாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்திடும்.

ரோஸ்மெரி ஆயில் : ஒரு சொட்டு ரோஸ்மெரி ஆயிலை ஒரு டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, வாயை கொப்பளித்தப் பின்னர் பல் துலக்கலாம். தினமும் இதனை செய்யலாம்.

சீஸ் : சீஸ் சாப்பிடுவதால் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து பற்களில் கறை படிவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி அவை, பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதை தடுத்திடும்.இதனால் உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

ஆப்பிள் : உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனால் பற்கள் சுத்தமாவதோடு ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து செய்தால் பற்களில் கறை படிவது தடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராம் கோபால் வர்மா இயக்கிய ஆபாச பட வீடியோவை நீக்க முடிவு!
Next post (VIDEO)6 அத்தியாயம்!!