பொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்!!

Read Time:3 Minute, 9 Second

இன்றைய நவீன வாழ்க்கை முறையினால் நம் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எப்போதும் மாசு நிறைந்த இன்றைய சூழலில் சருமத்தை பராமரிப்பது என்பது சவாலான விஷயம் தான். சரும சுருக்கங்களை தவிர்க்கவும் சாஃப்ட்டான ஸ்கின் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக்ஸிஜன் பேஷியல் செய்திடலாம். ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் உங்களுக்கு உடனடி ரிசல்ட் கிடைத்திடும். அப்படி என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

மாய்ஸ்சரைசர் : ஆக்ஸிஜன் பேஷியல் சிறந்த மாய்சரைசராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படும் பட்சத்தில் இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சருமத்தில் உள்ள பிஎச் லெவலை சீர்படுத்துவதால் சருமம் பாதுகாப்பானதாக இருக்கும்.

புத்துணர்ச்சி : புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். அதோடு இறந்த செல்களை நீக்கிடுவதால் மாசுமருவற்று பொலிவுடன் காணப்படும். இது உங்கள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

பருக்கள் : சருமத்துளைகளில் அதிகப்படியான் அழுக்கு சேர்வது, எண்ணெய் சுரப்பது, சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை பருக்களுக்கு ஒரு காரணம். ஆக்ஸிஜன் பேஷியல் பருக்களையும் வராமல் செய்திடும். இந்த பேஷியல் செய்வதால் அழுக்குகள் எல்லாம் நீங்குவதோடு எண்ணெய் சுரப்பும் குறைகிறது. இதனால் பருக்கள் வரும் என்ற அச்சம் தேவையில்லை.

சுருக்கங்கள் : ஆக்ஸிஜன் பேஷியல் உங்களை இளமையுடன் இருக்கச் செய்திடும். வயதாவதை உணர்த்தும் வகையில் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் வராமல் செய்திடும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமம் டைட்டாக இருக்கச் செய்கிறது. இதனால் சுருக்கங்கள் வருவது குறையும்.

சருமப்பொலிவு : ஆக்ஸிஜன் பேஷியல் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, ரத்தஓட்டத்தை அதிகரிப்பதால் சருமம் ஆரோக்கியத்துடன் காணப்படும். இதனால் எப்போதும் முகத்தில் தோன்றும் நிறமாற்றங்கள்,பரு,வறட்சி போன்றவை இல்லாமல் பொலிவுடன் காணப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்பே நலம்தானா?
Next post ரஜினியுடன் கமல் கூட்டணியா?