பொன் வண்ண மயில்கள்!!
ஓவியாவுக்கென ரசிகர்கள் எதற்கும் தயாராய் இருக்கிறார்கள். ஓவியா ஆர்மி என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது. ரசிகர்களே நலம் விரும்பிகளாகவும் மாறி சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் நல்ல குணங்களை இன்றைய பெண்களோடு இணைத்தும், ஒப்பிட்டும் விவாதம் கிளப்பி வருகின்றனர்.
நந்திதாவுக்கு நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். சிறப்பான நடிப்பை வழங்குவதில் வல்லவராய் வலம் வரும் நந்திதாவும் ஓவியாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர். யூ டியூபில் வலம் வருகின்றன அந்த விளம்பரக் காட்சிகள். மயக்கும் கொலுசுக் கால்கள், இடையில் பொன்வண்டு சோப் வைத்து துணி துவைக்கும் அந்தப் பெண்கள் செய்யும் அலப்பறை நம்மை வியக்க வைக்கின்றது.
மயில் வண்ணச் சேலையில் ஓவியாவும், ஆரஞ்சு வண்ணச் சேலையில் நந்திதாவும் செம ஃபிரஷ்ஷாக வலம் வருகின்றனர். இவர்கள் விளம்பரத்தில் நடித்த போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டாக்கள் அதிகம். சிட்டா அட்வர்டைசிங் கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட் வசுபதியிடம் ஓவியா, நந்திதாவை இயக்கிய அனுபவம் குறித்துக் கேட்டோம்.
“விளம்பரத்தில் ஸ்டார் வேல்யூ உள்ள பெண்கள். ஆனா ஹோம்லி லுக் இருக்கணும். அதனால ஓவியா, இனியா ரெண்டு பேரையும் மனசில் வெச்சித்தான் கான்செப்ட் உருவாக்கினோம். இனியாவோட டேட் கிடைக்காததால அந்த இடத்தை நந்திதா பெட்டரா பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஓவியா ரொம்ப போல்டாவும், ஜாலியாவும் இருந்தாங்க. ஷாட் பற்றிச் சொன்ன அடுத்த நிமிஷம் ரெடியா நின்னாங்க.
ஓவியா, நந்திதா ரெண்டு பேருக்குள்ளயும் செம கெமிஸ்ட்ரி. யானைக்கு ரெண்டு நாள் முன்னாடியே பயிற்சி கொடுத்திருந்தோம். அது குழந்தை மாதிரி பழகினதால ஷாட் எடுத்தப்போ ரொம்ப பெட்டராவே ஃபீல் பண்ணினாங்க. ரெண்டு ஹீரோயின்ஸ்… கலாட்டா இல்லாமலா? ரெண்டு பேர் நேரத்தையும் ஃபிக்ஸ் பண்ணி, தனித்தனியா ஃபாலோ பண்ணி ஒருத்தருக்காக இன்னொருத்தர் காத்திருக்காம கவனமா டீல் பண்ணினோம். சின்ன விஷயம் கூட காயப்படுத்திடக் கூடாதுன்றதுல கவனமா இருந்தோம். மூணு நாள் ஷூட். எந்த சிரமமும் இல்லாம முடிச்சிக் கொடுத்தாங்க. ரிச்சான யோசனைக்கு யூ டியூப்லயே நல்ல ரெஸ்பான்ஸ், விரைவில் திரையிலும் பார்க்கலாம்”என்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating