சுழலும் கட்டடம் – துபாயில் இன்னொரு அதிசயம்!

Read Time:2 Minute, 28 Second

மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும். உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும். கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும். இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும். மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “ஓரினச் சேர்க்கையாளருக்காக போராடுவார் ஒபாமா” -மனைவி மிச்செலி ஒபாமா உறுதி
Next post பிரிட்டனுக்கான புதிய இலங்கையின் தூதுவராக நிஹால் ஜயசிங்க