சுவரொட்டி ஒட்டியோர் மீது தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்

Read Time:1 Minute, 55 Second

ஜூன் 30ம் திகதி நடைபெறவுள்ள சமாதானமும் ஒருமைப்பாடும் அமைப்பின் பொதுக்கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு விசுவாசமான வன்முறைக்கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது நேற்றுக்காலை 6மணியளவில் பொரளைப்பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீதே இத்தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தாக்குதலின் போது காயமடைந்த அந்தஅமைப்பின் உறுப்பினரொருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் சமாதானமும் ஒருமைப்பாடும் எமதுநாட்டுக்கு அத்தியாவசியமான இத்தருணத்தில் இவ்வாரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் சமாதானத்திற்கும் ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பு என்ற வகையில் இத்தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதோடு தாக்கதலுடன் தொடர்புடைய வன்முறையாளர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும் அந்த அமைப்பின் இலங்கைக்கிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது
Next post சீனா: போதை மருந்து விற்பனை; மேலும் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்