கர்ப்பத்தை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்!!

Read Time:1 Minute, 43 Second

கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்ற 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன், குறுகிய காலத்திலேயே அரசியல் களத்தில் வளர்ச்சி பெற்று பிரதமராகவும் ஆனவர். கருவுறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு இவை இரண்டும், பணியிடங்களில் பெண்களின் வாய்ப்புகளை தடுக்கும்விதமாக இருக்கக்கூடாது என்று கடந்த ஆண்டு தன்னுடைய பிரசாரத்தின்போது இவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய கணவர் கிளார்க் கேபோர்ட்டுடன் தான் கர்ப்பமடைந்த செய்தியை அவர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். எதிர்பாராத இந்த விஷயம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘என்னுடைய முதல் குழந்தை கருவுற்றிருப்பது குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் நானும் கிளார்க்கும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். வரும் ஜூன் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தை பிறந்தவுடன் 6 வாரங்கள் விடுப்ெபடுக்க இருக்கிறேன். அதுவரை துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆட்சிப் பொறுப்பை கையாளுவார்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேஜா ரெட்டி[PHOTOS]
Next post புருஸ் லீ வாழ்க்கையை படமாக்கும் இந்திய இயக்குனர்!!