“ஓரினச் சேர்க்கையாளருக்காக போராடுவார் ஒபாமா” -மனைவி மிச்செலி ஒபாமா உறுதி

Read Time:1 Minute, 51 Second

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைக்காக பாரக் ஒபாமா குரல் கொடுப்பார் என்று அவரது மனைவி மிச்செலி ஒபாமா உறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமா பல்வேறு தரப்பினரின் ஆதரவை பெற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவேன், உழைக்கும் வர்க்கத்தினர் வறுமையிலிருந்து மீள பாடுபடுவேன், இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்ப பெறுவேன் என ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் பெரும் கூட்டமாக உருவெடுத்து வரும் ஓரினச் சேர்க்கையாளர்களின் வாக்குகளை கவரவும் அவர் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் பேசிய ஒபாமாவின் மனைவி மிச்செலி, “ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ஒபாமா செயல்படுவார்’ என்று உறுதியளித்தார். 1969-ல் போலீஸôருக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏராளமானோர் பலியாயினர். இதை சுட்டிக் காட்டிய மிச்செலி, “எதிர்வரும் தடைகளை கடந்து செல்வோம். அதற்கு ஒபாமா உதவியாக இருப்பார்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டு ரிஎம்விபியினரைச் சந்தித்தோர்.. ‘கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது” -அரசியல் அவதானிகள்
Next post சுழலும் கட்டடம் – துபாயில் இன்னொரு அதிசயம்!