சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒபாமா எதிர்ப்பு

Read Time:1 Minute, 42 Second

சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியல்ல என்று அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார். 12 வயதுக்கு உள்பட்டவர்களை கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அமெரிக்காவில் லூசியானா மாகாண சட்டம் வகை செய்கிறது. இச்சட்டம் செல்லாது என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு கூறியது. கொடூரமான தண்டனைக்கு அமெரிக்க அரசியல் சட்டம் தடை விதிக்கிறது. அச்சட்டத்துக்கு விரோதமாக லூசியானா மாகாண சட்டம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது. மிகவும் மிருகத்தனமாகக் குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தவறல்ல. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று ஒபாமா கருத்து கூறியுள்ளார். குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைனும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளார். அமெரிக்க மக்களும் மரண தண்டனை சில நேரங்களில் தேவையானதுதான் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
Next post இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது