கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம்..!!
கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது
• கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும்
• ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.
இன்பம் பெறும் வகை!
உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார்.
முதல் வகை
இன்பம் பெறுவதற்கு ஆண்-பெண் இருவருக்கும் எவ்விதத் தடையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அனைத்து மனிதர்களாலும் இன்பம் அனுபவிக்க முடியும்.
ஆனால், அந்தந்த வகையைச் சேர்ந்தவர்கள், அவரவர் வகையினரைச் சேர்ந்த இணையுடன் சேர முடிந்தால் அதிகபட்ச இன்பத்தை அடையமுடியும் என்கிறார்.
குத்துச்சண்டைப் போட்டியின்போது சண்டைக்கு மோதவிடுபவர்களைச் சரியான எடையை வைத்தே முடிவு செய்வார்கள். ஏனென்றால், அப்போதுதான் இருவரும் சம பலத்துடன் மோத முடியும்.
சம பலம் இல்லாதவர்கள் மோதும்போது, அங்கே நடப்பதை சண்டை என்று சொல்ல முடியாது.
அதுபோல், இரு மனம் இணையும் திருமணத்திலும் ஆண்–பெண் இருவரும் ஒத்த வகையினராக இருத்தல் வேண்டும் என்கிறார்.
முயல் வகை, எருது வகை மற்றும் குதிரை வகை என்று ஆண்களை வகை பிரிக்கிறார்.
அதாவது, சிறிய அளவு உறுப்பு உள்ளவர்களை முயல் வகை என்றும்,
நடுத்தர அளவு உள்ளவர்களை எருது வகை என்றும்,
மிகவும் நீண்ட அளவு உள்ளவர்களைக் குதிரை வகையினராகவும் பிரிக்கிறார்.
பெண்களை பெண் மான், பெண் குதிரை மற்றும் பெண் யானை என்று பிரிக்கிறார்.
பெண் உறுப்பின் ஆழத்தைப் பொறுத்து,
சிறிய ஆழம் உள்ள உறுப்புகொண்ட பெண்களை பெண் மான் இனத்திலும்,
நடுத்தர ஆழம் உள்ள பெண்களைப் பெண் குதிரை என்றும்,
மிகவும் ஆழமான உறுப்பு உள்ள பெண்களைப் பெண் யானை என்றும் பிரித்திருக்கிறார்.
ஒரே அளவான உறுப்புகளைக்கொண்ட ஆணும், பெண்ணும் சேர்வது, ‘சமமான பிடிப்புள்ள சேர்க்கை’ என்றும், அதுவே அதிகபட்ச இன்பம் தரக்கூடியதாக இருக்கும் என்றும் வர்ணிக்கிறார்.
உறவுகளில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உறுப்புகள் பொருத்தமாக அமையாவிட்டால், அது தவறான பொருத்தமாகும்.
இதில் ஆண்–பெண் இருவரும் முழுமையான இன்பம் அனுபவிக்க முடியாது.
இரண்டாம் வகை
ஆண்-பெண் இருவருக்கும் ஒரே நேரத்தில் காம இச்சை தோன்றுவதில்லை.
அப்படியே தோன்றினாலும், இருவருக்கும் ஒரே அளவில் தோன்றுவதில்லை.
காம இச்சை அதிகமாவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காம இச்சை அதிகம் உள்ள ஆண், அடிக்கடி பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்தால், அந்தக் குடும்பம் குலைந்துபோக வாய்ப்பு உண்டு.
அதுபோல், அதிக ஆசை உள்ள பெண்ணை, ஆணால் திருப்திப்படுத்த இயலாத சூழலிலும் குடும்பத்தில் பிளவு வருவது உண்டு.
அதனால், காம வேகத்தைப் பொறுத்து மித வேகம், மத்திய வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கிறார்கள்.
இதில் ஒரேவிதமான காம வேகம் உடையவர்கள் கூடுவதில்தான் இன்பம் கிடைக்க முடியும்.
மாறுபட்ட வேகம் உடையவர்களின் சேர்க்கை திருப்தி தராது.
கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும்.
ஆண் மற்றும் பெண்ணுக்கு எல்லா சமயத்திலும் கலவி நேரம் ஒரே அளவு நீடிக்கும் என்று சொல்லமுடியாது.
சிலருக்குக் கலவியில் ஈடுபடும் முன்னரே விந்து வெளிப்பட்டுவிடும்.
சிலருக்குப் பெண்ணுடன் இணையத் தொடங்கியதும் விந்து வெளியேறிவிடும்.
இப்படிப்பட்ட ஆண்களுக்குக் கலவியில் இன்பம் கிடைக்காதது மட்டுமின்றி, பெண்ணுக்கும் கண்டிப்பாக இன்பமும், திருப்தியும் கிடைக்காது.
விந்து வெளிப்படுதலை நிர்ணயிப்பதில் மனநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனுபவத்தின் மூலம் விந்து சீக்கிரம் வெளிவந்துவிடாமல் தடுத்துவிட முடியும்.
ஆணுக்கு காம இச்சை உச்சகட்டத்தை அடைந்து விந்து வெளியேறும் முன், பெண் உச்சகட்டத்தை அடையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது முடியாதபட்சத்தில் இருவரும் ஏக காலத்தில் உச்சகட்டத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
அப்போதுதான் கலவியில் பூரண இன்பம் உண்டாகும்.
கலவிக்கு ஆகும் நேரத்தை வைத்து சீக்கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று பகுத்துக் கூறலாம்.
சீக்கிர கலவி நேரம் உடைய ஓர் ஆண், தன்னைப் போன்ற ஒரு பெண்ணுடன் கலந்தால் அவர்களுடைய புணர்ச்சி நேரம் குறுகிய கால அளவாக இருக்கும்.
அதைப்போல் மத்திய காலம் மற்றும் நீண்ட காலம் என்று சம நேரப் புணர்ச்சி உடையவர்கள் ஒன்று சேர்ந்தால் கலவி என்பது அதிக இன்பம் தருவதாக இருக்கும்.
ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால், ஆண் விந்து வெளிப்படும்போதுதான் அதிகபட்சம் இன்பம் அடைகிறான்.
கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது.
ஆரம்பத்தில் அவளுக்குக் காம இச்சையானது மிதமாக இருக்கும்.
அவளைக் கட்டி அணைத்து முத்தமிடும்போது, படிப்படியாக இன்பம் அதிகரிக்கும்.
பிறகு, கலவியில் மனம் லயித்து உணர்வு அற்றவளாகத் தன் நிலை மறந்து மூழ்கிவிடுவாள். இதைத்தான் காமத்தின் உச்சகட்டத்தை அடைகிறாள் என்று கூறுவார்கள்.
காம எழுச்சி ஏற்படும்போது அதாவது கலவியின் ஆரம்பகட்டத்தில் பெண் உறுப்பில் வழுவழுப்பான திரவம் சுரக்கிறது.
இதைப் பெண் விந்து என்று சொல்லக் கூடாது.
இந்தத் திரவமானது, கலவியின்போது ஆண் உறுப்பு எளிதாக இயங்க உதவி செய்ய சுரக்கும் திரவமாகும்.
கலவியில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் ஒரே வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் அனுபவிக்கும் இன்பம் உச்சகட்டமாக இருக்கும்.
கலவியில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் மிகவும் உயர்வானதாக இருக்கும்.
ஆனால். இருவரும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இருவராலும் முழுமையாகக் கலவியை அனுபவிக்க இயலாமல் போகலாம்.
காம இன்பம் பெற ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதில் தவறில்லை.
எனவே, ஒருவரை ஒருவர் திருப்தி அடையச் செய்ய வேண்டியது கடமையாகும்.
Average Rating