சர்க்கரை நோயுள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் செய்ய வேண்டியவை..!!

Read Time:2 Minute, 15 Second

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைத்து கொள்வதில்லை என்றால் பிறகும் குழந்தை மோக்ரோசோனிக் குழந்தை (பெரிய குழந்தை) அல்லது சர்க்கரை குழந்தை என்று சொல்வார்கள்.

சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் ஊசி மூலமோ அல்லது மாத்திரையின் மூலமோ எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளை போலிக்ஆசிட் மாத்திரைகளை குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து போலிக்ஆசிட் 5 எடுத்துக் கொள்ள வேண்டும். இது எந்தவித குறையும் இல்லாத நலமான குழந்தை பிறக்க உதவும்.

டைப்-1 சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கர்ப்பத்தை தள்ளி போடா கூடாது. இவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோய் இருப்பதால் மற்ற உடல் பிரச்சனைகளாக இரத்த அழுத்தம், இதய கோளாறு, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன் இந்த உடல் பிரச்சனைகள் சரி செய்து கொள்வது நல்லது.

டைப் -2, சர்க்கரை நோய் உள்ள பெண்கள் Metformin போன்ற சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசிகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் பல ஆராய்ச்சிகளில் கர்ப்பகாலத்தில் Metformin மாத்திரைகளை விட இன்சுலின் ஊசிகளே கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம்..!!
Next post கண்ணீர் மழையில் செம்பா: ரசிகர்களாம் அசிங்கபட்ட ஜூலி..!! (வீடியோ)