இந்த வார ராசிபலன் (27.06.08 முதல் 03.07.08 வரை)
மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: நட்பு வட்டாரம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இழுபறியான காரியங்கள் நடந்தேறும். வேலையில் சுமூக நிலை காணப்படும். சுப காரியப் பேச்சுக்கள் சீராக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது: குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்களால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரிந்தவர்கள் திரும்பி வருவார்கள்.
பெண்களுக்கு: செலவுகள் உண்டாகும். வார இறுதியில் சந்தோஷ செய்தி வந்து சேரும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். காரிய வெற்றி உண்டு. இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
வேலை பார்ப்போருக்கு: கொடுத்த காரியத்தை கச்சிதமாக முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது: எந்த சவாலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். காரிய வெற்றி உண்டு. முக்கிய முடிவுகளில் இருந்து வந்த தடங்கல் நீங்கி சுபமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கு: காரியங்களில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையில் திருப்தி நிலவும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகளிடம் நற் பெயர் கிடைக்கும். அலுவல் நிமித்தமான பயணங்களில் கவனம் தேவை.
கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது: தனித்துவத்துடன் செயல்படுவீர்கள். உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்கலாம். இழுபறியான காரியம் நடந்தேறும்.
பெண்களுக்கு: மனதில் மகிழ்ச்சி கூடும். தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். குடும்ப உறவுகள் வலுப்படும். சுப காரியம் கூடி வரும்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களால் மனக் கிலேசம் ஏற்படும். முயற்சிளுக்கு தீவிரம் கொடுக்கலாம். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும்.
சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது: எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். காரிய வெற்றி உண்டு. செலவுகள் அதிகரிக்கும். வரவுகளும் திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.
பெண்களுக்கு: கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். இனிமையாக பேசி அனைவரையும் கவருவீர்கள். வீட்டில் விருந்துபச்சாரத்திற்குக் குறைவிருக்காது. பொருள் இழப்புக்கு வாய்ப்புண்டு, கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து காரியத்தை சாதித்துக் கொள்ளவும் மேலிடத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயலலாம், கவனம் தேவை. புதிய முயற்சிளை தள்ளிப் போடவும்.
கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது: புதிய காரியங்களை தள்ளி போடவும். செயல்களில் தடை, இழுபறி நிலவும். மனக் குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் கூட்டம் உற்ற துணையாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். துணிச்சலுடன் எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களுடன் நல்ல நட்பு நிலவும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகள் பலிக்கும். நினைத்தது நடக்கும்.
துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது: எதிர்ப்புகள் விலகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காரியங்களில் கவனம் தேவை. பெருமாளை வழிபட நல்லது நடக்கும். மன வலிமை கூடும். நிம்மதி நிலவும்.
பெண்களுக்கு: சுப காரியம் கூடி வரும். சந்தோஷ செய்தி வந்து சேரும். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். பண வசதி கூடும். கடன் தொல்லை அடையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். இடமாற்றம், பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது: எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பொருள் இழப்புக்கு வாய்ப்புண்டு, கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும். வார இறுதியில் நற்செய்தி வந்து சேரும்.
பெண்களுக்கு: சாதுரியமாக செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் பாராட்டும் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலக சூழல் இயல்பாக இருக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். இழுபறியான காரியம் நடந்தேறும்.
தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது: காரியங்களில் இழுபறி காணப்படும். எந்தக் காரியத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் நன்கு யோசித்து இறங்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
பெண்களுக்கு: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் தேவை. வீண் சண்டையை தவிர்க்கவும். செலவுகளை கட்டுப்படுத்த முயலவும். முயற்சிகளுக்கு ஊக்கம் தரலாம். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்
வேலை பார்ப்போருக்கு: வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையான போக்கு அவசியம்.
மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது: செலவுகள் குறையும், வரவுகள் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் நிலவும். குடும்பத்தில் குதூகலம், மகிழ்ச்சி நிலவும். அலைச்சல் குறையும். மன வருத்தம் குறையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு: கணவருடன் அனுசரித்து செல்வது நல்லது. பண வரவு குறையும். காரியங்களில் கவனம் தேவை. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களால் தொல்லை இருக்காது. பதவி உயர்வு தாமதமாகும். இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது: வழக்குகளில் சாதக நிலை காணப்படும். உடல்நலனில் அக்கறை தேவை. செலவுகள் குறைந்து, வரவுகள் அதிகரிக்கும். சேமிப்பு பெருகும். காரியங்களில் தடை, தாமதம் நிலவும்.
பெண்களுக்கு: மனக் கவலை அகலும். பதட்டம் நீங்கும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவருடன் ஒற்றுமை நிலவும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. இடமாற்றம், பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது: பணவரவு திருப்தி கரமாக இருக்கும். உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். சாதுரியமாக செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களுக்கு உதவுவீர்கள். வீண்செலவுகளால் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷத்திற்குக் குறைவிருக்காது. உற்சாகத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளும் துணையாக இருப்பார்கள். பதவி உயர்வு, இட மாற்றத்ைத எதிர்பார்க்கலாம். சிலருக்கு வேலைப்பளு சற்றே அதிகமாக இருக்கும்.
Average Rating