எவ்வித அர்த்தங்களையும் இந்தியா பிரயோகிக்கவில்லை அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்து உள்ளார்

Read Time:2 Minute, 1 Second

இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கமாறு இந்தியா இதுவரையிலும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாக நேற்றையதினம் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்காக இந்திய உயர்த் தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும் இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மிக நெருக்கமான ஓர் நிலையை எட்டியுள்ளதாகவும் சார்க் மாநாடு தொடர்பாக கலந்துரை யாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா சிராட்டிக்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதல்.. புலிகளின் இருபத்தைந்து சடலங்கள் மீட்பு! புலிகளின் நிலத்தடி பாரிய முகாம் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்!!
Next post கொழும்பில் புலிகளை மறைத்து வைத்திருந்த சிங்களப் பெண்