கட்சித் தலைமையிலிருந்து ரணில் பதவி விலக வேண்டும் -லக்பிம நாளேடு செய்தி

Read Time:1 Minute, 51 Second

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவராக ருக்மன் சேனநாயக்க நியமிக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் உபதலைவர் பொறுப்பு ஜோசப் மைக்கல் பெரேரா அல்லது காமினி ஜயவிக்கிரமவிற்கு வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார் கட்சி மறுசீரமைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டகுழுவிடம் இந்த பரிந்துரைகளை அவர் முன் வைத்துள்ளதாக லக்பிம செய்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜோசப்மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, சரத்சந்திர ராஜகருணா, ரேணுகாஹேரத், அமரபியசீலி ரத்னாயக்க ஆகிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி மறுசீரமைப்புக் குழுவிற்கு இந்த பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன லக்ஷமன் செனவிரத்ன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டொக்டர் ராஜத சேனாரத்ன மற்றும் ரவீந்திர சமரவீர ஆகிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூதூரில் 17பேர் படுகொலை விடயம் பிரான்ஸ் சர்வதேச மயப்படுத்தும்..
Next post இந்தோனேஷிய விமானம் மாயம்