முதலமைச்சர் வேட்பாளர்களை நேற்று வெளியிட்டுள்ளது ஜே.வி.பி

Read Time:2 Minute, 36 Second

சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கு ஜே.வி.பியின் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர்களை அக்கட்சி நேற்று அறிவித்தது அதன்படி வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஜே.வி.பியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் சப்பிரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக ஜே.வி.பியின் நீண்டகால உறுப்பினர் சமீர கொஸ்வத்த நியமிக்கப்பட்டுள்ளார் ஜே.வி.பியினர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவே மேற்படி விவரங்களை வெளியிட்டுள்ளார் அத்தோடு பிரசார நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்காகவே மாவட்ட மட்டங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார் அநுராதபுரம் மாவட்டத்திற்கு வசந்தசமரசிங்கவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு சித்தானந்தசில்வாவும் கேகாலை மாவட்டத்திற்கு துமிந்ததாகமவும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு சமிந்தகொஸ்வத்தவும் தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார் அவர் இதேவேளை அரசு தரப்பு மாவட்ட மட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகத் தலைவர்களை நியமித்துள்ளது அதன்படி இரத்தினபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் நிமால் சிறீபாலடிசில்வாவும் கேகாலை மாவட்டத்திற்கு கெஹெலிய ரம்புக்வெல்லவும் அநுராதபுரம் மாவட்டத்திற்கு அநுரபிரியதர்ஷன யாப்பாவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் அரசுத்தரப்பின் பிரசார நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று நடத்துவர் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவலர் தற்கொலை
Next post பேநசீர் படுகொலையால் எல்லாமே மாறிவிட்டது: முஷாரப் வேதனை