வாழ்க்கை 40-ல் தொடங்குகிறது; 46-ல் உச்சத்தை எட்டுகிறது

Read Time:2 Minute, 17 Second

வாழ்க்கை 40 வயதில் தான் தொடங்குகிறது என்பது ஆங்கிலேயர்களின் பழங்கால நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மைதான் என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் சராசரியாக 40 வயதை எட்டும்போது தான் வாழ்க்கையில் முழுமை ஏற்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை 40 வயதுக்கு மேல்தான் அடைகிறார்கள். 46 வயது என்பது மேஜிக் வயது. அதுதான் வாழ்க்கையின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எந்த பொருள் மீதெல்லாம் ஆசைப்படுகிறோமோ அவையெல்லாம் 40-களில் தொடங்கி 50-க்குள் தான் கிடைக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் 1000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 40 வயதில்தான் நவீன வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகளையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். சராசரியாக இவற்றின் மதிப்பு 50 ஆயிரம் பவுன்ட். பிரிட்டனில் வேண்டுமானால் 40 வயதில் வாழ்க்கை தொடங்கலாம். ஆனால் இது இந்தியாவுக்கு எந்தளவு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. பொருளாதாரத்தை பொருத்த வரை 40 வயதுக்கு மேல்தான் இந்தியாவிலும் ஓரளவு தன்னிறைவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்தியாவில் வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் 40 வயதுக்கு மேல் இறங்கு முகத்தில்தான் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவர் -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா