நீண்ட ஆயுள் தரும் வைட்டமின் “டி”

Read Time:2 Minute, 34 Second

நாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல் நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாக இருக்கும். அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்து லண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகிவுள்ளன. ஆயுள் பெருகுவதற்கு உடல் சத்துக்களில் வைட்டமின்-டி முன்னிலை வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த சத்தால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதையும், காலை சூரிய ஒளியின் மூலம் இந்தச் சத்து உடலுக்கு அதிகளவில் கிடைப்பதையும் ஏற்கெனவே விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவில் வைட்டமின்-டி சத்து இருப்பதை சுட்டிகாட்டியுள்ள விஞ்ஞானிகள், இதனை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்தத்தில் வைட்டமின் -டி சத்து 5 முதல் 10 நானோ மில்லி லிட்டர் அளவில் இருப்பின், அத்தகையோருக்கு இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தில் 20 முதல் 30 நானோ மில்லி லிட்டர் அளவு இந்தச் சத்து இருப்பின், அவர்களுக்கு ஆயுள் பலம் பெருகுவதுடன், இதயப் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதும் பெருமளவு தடுக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, நமது உடல் நலத்தை காத்து, ஆயுள் பலத்தை பெருக்க சூரிய ஒளி உடலுக்கு அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆயுள் பலம் பெருகுவதுடன், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கு சூரிய நமஸ்காரம் எந்தளவுக்கு முக்கியம் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்திச் சென்றதன் அவசியம், தற்போது ஆய்வின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்
Next post 150 LTTE cadres including child soldiers killed in one month – LTTE posters reveal