அதிக மேக்-அப், ஹீல் செருப்பு அணிய பெண்களுக்குத் தடை

Read Time:1 Minute, 30 Second

பெண்கள் அதிக மேக்-அப் போட்டுக் கொள்ளவும், மிக உயரமான ஹீல் செருப்பு அணியவும் மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை மலேசியாவின் கோட்டா பாரு நகரில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களில் வேலை செய்யும் பெண்கள் அதிக மேக்-அப், வசீகரிக்கும் லிப்ஸ்டிக், மிக உயரமான ஹீல் செருப்புகள் அணிந்து செல்வது போன்ற காரணங்களினால், பாலியல் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கோடா பாரு நகர சபை சார்பில் கடந்த மே மாதம் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அந்நகரத் தலைவர் ஷாபி இஸ்மாயில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் முஸ்லீம் பெண்களுக்கு இனி அலங்காரம் செய்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த வார ராசிபலன் (27.06.08 முதல் 03.07.08 வரை)
Next post விடத்தல்தீவை நெருங்கும் இலங்கைப் படையினர் -(ஜெஸ்மின்)