இந்தியாவில் கிட்னி மோசடி: 3 கிரேக்க பெண்கள் கைது

Read Time:2 Minute, 23 Second

டெல்லியில் சமீபத்தில் சட்டவிரோதமாக கிட்னி ஆபரேசன் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டாக்டர் அமித்குமார் கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் நோயாளிகளுக்கு அவர் சட்டவிரோதமாக ஆப ரேஷன் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து தங்கி சட்டவிரோதமாக கிட்னி மாற்று ஆபரேஷன் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கிரேக்க நாட்டு பெண் டாக்டர் ஒருவர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களிடம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.2லட்சத்து 50 ஆயிரமும், தங்கும் வசதிக்கு ரூ. 60 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. ஆனால் கிட்னிதானம் செய்தவர்களுக்கு ரூ.1லட் சம்மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு நோயாளிகளை அனுப்பி வைத்த கிரேக்க நாட்டை சேர்ந்த பெண் டாக்டர் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் அவர்களுக்கு எந்த ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது. கிட்னி தானம் கொடுத்தவர்கள் யார் மற்றும் கைதானவர்கள் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்தியாவில் அறுவை சிகிச்சை முடிந்ததும் நேராக கிரேக்க நாட்டுக்கு திரும்பும் நோயாளிகளுக்கு கிரேக்க மருத்துவமனைகளில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணைக் கொலை கோரும்: லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் கைதி
Next post பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவலர் தற்கொலை