கருணைக் கொலை கோரும்: லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் கைதி

Read Time:1 Minute, 51 Second

லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் அரசியல்வாதி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேரா பகதூர் சிங். கடந்த 1989ம் ஆண்டு இவர் சரோஜினி நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். இதன் பின்னர் இவர் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்காக இவர் கைது செய்யப்பட்டு லக்னோ மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார். ஷேர் பகதூர் சிங் மீது தொடரப் பட்ட வழக்குகளில் பெரும்பாலான வற்றிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டுள்ள போதிலும், சிறையி லிருந்து மட்டும் விடுதலை செய்யப் படாமல் உள்ளார். விடுதலையாவதற்காக மேற் கொண்ட இவரது பல முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதால், வாழ்க்கையை வெறுத்துப்போன ஷேரா பகதூர் சிங் தம்மை கருணைக் கொலை செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளதாக அவரது வழக்கறிஞர் கிஷன் அரோரா தெரிவித்துள்ளார். எனது வாழ்க்கையில் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்து விட்டேன். இனி எனக்கு வாழ்ப் பிடிக்கவில்லை என்று ஷேரா கூறியதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு
Next post இந்தியாவில் கிட்னி மோசடி: 3 கிரேக்க பெண்கள் கைது