விஜய் சேதுபதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் மணிரத்னம்…!!

Read Time:2 Minute, 20 Second

மணிரத்னம் இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணையவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, `இமைக்கா நொடிகள்’ படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `சீதக்காதி’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மணிரத்னம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின்னர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கவிருப்பதாக சிம்பு சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…!!( வீடியோ)
Next post வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு…!!(வீடியோ)