தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார்…!!
தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் குமார் தான் என்று பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் தற்போது தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா – நயன்தாராவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சங்க்ராந்தியை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது,
பாலையாவை வைத்து படம் இயக்குகிறீர்களா? அவர் ரொம்ப கோவக்காரர், அவரை வைத்து எப்படி படம் இயக்குவீர்கள் என்று தமிழ்நாட்டில் கேட்டனர். ஆனால் படத்தின் கதை குறித்து பேசும் போதும் சரி, படப்பிடிப்பின் போதும் பாலையாவிடம் நான் கோபத்தை பார்க்கவே இல்லை. மாறாக நான் தான் படப்பிடிப்பில் அடிக்கடி போகப்பட்டு கொண்டிருந்தேன். இதுவரை நான் 46 முதல் 47 படங்களை இயக்கியிருக்கிறேன்.
அனைத்து நடிகர்களுமே கதை, காட்சிகள், படப்பிடிப்பு என மாற்றங்களை கொண்டு வர விரும்புவார்கள். அதை இப்படி பண்ணலாமா? இதை அப்படி பண்ணலாமா? டயலாக்களை இப்படி மாற்றலாமே? என நிறைய கேட்பார்கள். ஆனால் நான் அதை தவறு என்று சொல்லவில்லை. எதையாவது புதுமையாக, அவர்களை நல்ல விதமாக காட்டுவதற்காக அப்படி கேட்பதில் தவறு இல்லை.
ஆனால் இந்த ஷாட் எதற்கு? இது டயாலாக்கை மாற்றலாமா? என எதிலுமே இரண்டு நடிகர்கள் மட்டும் எனது விஷயத்தில் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் அஜித் குமார், மற்றொருவர் பாலையா என்றார்.
கே.எஸ்.ரவிக்குமார், அஜித்தை வைத்து `வரலாறு’ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டி வரும் நிலையில், பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரும் அஜித்தை புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating