ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு 12 குறிப்புகள்..!!
ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டாம்: கர்ப்ப காலத்தில் இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் அறிவுரை கூறுவது சகஜம். அதற்காக கட்டுப்பாடின்றி சாப்பிட வேண்டியதில்லை. ஆரோக்கியமாக சாப்பிட்டால் போதும்.
1.எடை குறைவாக இருந்தால் அல்லது உங்கள் கருவில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 300 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். எடை கூடுவதால் கர்ப்பத்தில் பிரச்சனைகள் வரும், பிரசவமும் கடினமாகும், சிக்கலாகும்.
2.சிறிய அளவில் அவ்வப்போது சாப்பிட வேண்டும்: ஆனால் ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. நாளின் பெரும்பாலான நேரம் உங்களுக்கு குமட்டல் இருந்தால் இந்தக் கட்டுப்பாடு முக்கியம்.
3.சத்து மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்: உங்கள் மருத்துவர் வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்து மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். நீங்கள் சத்துள்ள சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று நினைத்தாலும் இவற்றைத் தவிர்க்க வேண்டாம்.
4.கீழ் இடுப்புப் பகுதித் தசைகளை வலிமைப்படுத்த வேண்டும்: இந்தத் தசைகளுக்கு வேலை கொடுத்து அவற்றை பலப்படுத்த வேண்டும். போதிய உடல் உழைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி, தரையைத் துடைப்பது, சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்தால் கீழ் இடுப்புத் தளத் தசைகள் பலப்படும். யோகா, ஆழ்ந்து சுவாசித்தல் போன்ற பயிற்சிகள் பிசவத்தின் போது மிகவும் உதவியாக இருக்கும்.
5.ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றும்போது ஓய்வெடுங்கள்: களைப்பாக இருப்பதாகத் தோன்றும்போதெல்லாம் ஓய்வெடுங்கள். குழந்தை பிறந்த பிறகு ஓய்வென்பது கிடைக்க அரிய விஷயமாகிவிடும்! ஆகவே இப்போதே அனுபவித்துவிடுங்கள்.
6.எல்லோரும் கூறும் அறிவுரைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம்: கர்ப்ப காலத்தில் நிச்சயம் எல்லோரும் அவரவர்க்குத் தெரிந்த பல அறிவுரைகளை வழங்குவார்கள். இது போன்ற அறிகுறிகள் எதையும் பின்பற்றும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
7.புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்து அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்கவும்: உங்கள் இணையர் புகைபிடிப்பவர் எனில் புகையை சுவாசிக்கும் ஆபத்து உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.
8.நினைத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்: வலி நிவாரண மாத்திரைகளையும் பொதுவான உடல் பிரச்சனைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் தவிர்க்கவும். என்ன மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை எனில், உங்கள் மருத்துவரிடம் எழுதிக் கொடுக்கக் கேட்டு அந்த மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
9.ஆரோக்கியமான திரவ ஆகாரங்கள்: போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், அத்துடன் இளநீர், மோர், பழச்சாறு,எலுமிச்சைச் சாறு கலந்த நீர் போன்ற ஆரோக்கியமான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் உடலின் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளும், புத்துணர்வு வழங்கும். ஆற்றலை வழங்கும்.
10.நொறுக்குத் தீனியில் கவனம்: கர்ப்ப காலத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் எப்போதும் கவனம் தேவை. கிடைக்கும் எல்லா நொறுக்குத் தீனியையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளக் கூடாது. இதனால் தேவையின்றி எடைதான் கூடும். பிறகு இந்த எடையைக் குறைப்பது கடினம். அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், ஆரோக்கியமான கொட்டை வகைகளை உண்ணலாம்.
11.காய்கறிகள், பழங்கள்: வண்ணமயமான பழங்களையும் காய்களையும் அதிகம் சாப்பிடலாம். வீட்டில் செய்த எளிய உணவு வெளியே கிடைக்கும் சுவையான நொறுக்குத்தீனியை விட மேலானது. ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற உந்துதலை ஓரளவுக்கு சமாளித்துதான் ஆக வேண்டும்.
12.நோய்த்தொற்றுகளில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்: எந்த அளவுக்கு உங்களை நோய்த்தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் கர்ப்பமும் பிரசவமும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Average Rating