ஈழம் என்று இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவது???
சகோதரப் படுகொலையை முன்னெடுத்து ரெலோவில் ஆரம்பித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையிலான அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்று கூறி பலநு}று இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதால் தனிஈழம் எவ்வளவு து}ரம் முன்னகர்ந்தது? தமிழ் மக்களின் இலட்சியமான தனிஈழத்தை அடைய தடையாக இருக்கின்றார்கள் என்று கூறி சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்ததனால் தனிஈழம் சாத்தியமானதா?.. கருணாஅம்மானின் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது குறித்தும், ஈழம் என்ற சொற்பதத்தின் யதார்த்தம் தொடர்பாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ‘ரிஎம்விபி” விடுத்திருக்கும் அறிக்கை….
ஈழம் என்ற சொற்பதம் 1970ம்ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்களிடம் மிகக் கவர்ச்சிகரமான ஒன்றாகவும், மிக விரும்பப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. 1983ம்ஆண்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதுவும் அரச இயந்திரத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளும், இன்னல்களும் ஈழம் எனும் சொற்பதத்தின் வலிமையை இன்னும் உறுதியாக்கியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழம் எனும் தனிநாட்டுக் கோரிக்கைதான் தமது நிம்மதியான வாழ்வுக்கும், அச்சமற்ற நிலைக்கும் ஒரே தீர்வு என அன்று பெரும்பாலான தமிழ் மக்கள் எண்ணியதில் தவறேதுமில்லை.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட தமிழ்ப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலான ஒற்றுமை, இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் வலுவான பின்புல ஆதரவு என்பன காரணமாக தனிஈழம் மிகச் சாத்தியமான ஒன்றாகவும், அடைந்து விடக்கூடிய ஒன்றாகவுமே தென்பட்டது, உணரவும் பட்டது. பிரபாகரன் கொண்ட தனிமனித அதிகார வெறியும், வன்முறைகளில் கொண்ட அதீதஆர்வமும் தனிஈழம் எனும் சாத்தியப்படக்கூடிய தீர்வொன்றை சாத்தியமற்றதாக்கியது.
1986ம் ஆண்டு தனது தனிமனித அதிகார மோகத்திற்காக சகோதர இயக்கங்களை சாட்டுப்போக்குச் சொல்லி தடை செய்வதாகக் கூறி தனிஈழம் எனும் கொள்கைக்காகப் போராடவந்த பலநுறு இளைஞர்களை கொன்று குவித்து சகோதரப் படுகொலையை ஆரம்பித்த போது தனிஈழம் முதன்முறையாக சாத்தியப்படுமா? எனும் வினாக்குறியைத் தோற்றுவித்தது.
தொடர்ந்தும் சகோதரப் படுகொலையை முன்னெடுத்து ரெலோவில் ஆரம்பித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையிலான அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்று கூறி பலநு}று இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதால் தனிஈழம் எவ்வளவு து}ரம் முன்னகர்ந்தது? தமிழ் மக்களின் இலட்சியமான தனிஈழத்தை அடைய தடையாக இருக்கின்றார்கள் என்று கூறி சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்ததனால் தனிஈழம் சாத்தியமானதா?
அக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் அரசியலில் தமிழர் விடுதலைக் கூட்டணி அசைக்க முடியாத அங்கமாக இருந்தது. அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறவிரும்பிய மக்களின் நம்பிக்கையை வென்றிருந்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனிஈழக் கோரிக்கையை முதன் முதலாக மக்களின் முன்வைத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றது.
1989ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தனிஈழம் தொடர்பாக மாறுபட்ட கருத்தோட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டிருந்தது. ஆனாலும் கூட்டணித் தலைவர்களோடு புலிகளின் தலைமை உத்தியோகபூர்வ hPதியிலும், நட்புhPதியிலும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவே இருந்தது. இதனால் பிரபாகரனின் கொலைவெறிக்கு தாம் உள்ளடக்கப்பட மாட்டோமென கூட்டணித் தலைவர்கள் நம்பியதிலும் தப்பில்லை.
ஆனாலும் விருந்தினராய் வந்த பிரபாகரனின் கொலையாளிகள் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் கையால் சூடான தேனீரும், பிஸ்கட்டும் சாப்பிட்டு விட்டு தேனீரின் சுவை நாக்கை விட்டு ஆறுவதற்கிடையில் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலைக்கு பிரபாகரன் உத்தியோகபூர்வமாக உரிமைகோராத போதும் அடுத்து வந்த மாவீரர்தின நிகழ்வில் பின்வருமாறு குறிப்பிட்டார். தமிழ் ஈழத்தை ஏற்க மறுத்தால் நாளை பிரபாகரனிற்கும் மரண தண்டனைதான்….
ஆக அமிர்தலிங்கம் தான் ஏலவே ஏற்றுக்கொண்ட தனிஈழம் சாத்தியமாகாது என உணர்த்தியதினாலேயே அவர் கொல்லப்பட்டதாக பிரபாகரன் மறைமுகமாக அக்கொலைக்கு உரிமை கோரினார். அனால் அமிர்தலிங்கத்தின் குருதியைக் குடித்ததால் மட்டும் தனிஈழம் சாத்தியமானதா? விருந்தோம்பலுக்குப் பெயர்போன தமிழனின் வரலாற்றில் பெரும் கறையை ஏற்படுத்திய இக்கொலையும் தனிஈழத்தை சாத்தியமற்றதாக்கியதென்றால் அது மிகையல்ல
1980ம் ஆண்டு காலப்பகுதியில் உத்வேகமடைந்த தனிஈழத்தை நோக்கிய தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் வடகிழக்கில் வாழ்ந்த சகோதர இனமான முஸ்லிம் மக்களும் தங்களையும் ஐக்கியப்படுத்திக்கொண்டனர். தனிஈழத்தில் தாங்களும் நிம்மதியுடன், உரிமைகளுடனும் வாழலாம் என்று பல முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்தனர். முஸ்லிம் மக்களும் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் இப்போராட்டத்திற்கு வாரி வழங்கினர். சகோதர இனங்களால் கை கோர்க்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் மிக உறுதியானதாயும், தெளிவானதாகவும் இருந்தது. விடுதலைப் போராட்டத்தை இனவெறிப் போராட்டமாகவும் சித்தரித்ததும் பிரபாகரன்தான்.
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21-24 காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல இலட்சம் முஸ்லிம் மக்களை அகதிகளாக்கி தென்னாசியாவில் பெரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையொன்று து}பமிட்டு ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை மாற்றியமைத்து இனவெறிப் போராட்டமாகச் சித்தரித்து ஈழக்கொள்கையைத் தொலைத்தனர்.
அதே காலப்பகுதியில் கிழக்கில் முஸ்லிம், சிங்கள சகோதர இனங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவெறிப் படுகொலைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஈழம் தமக்கெதிரானது என்பதுடன் ஈழம் உருவானால் தாம் அங்கிருந்து விரட்டப்படுவோம் ஈழத்தில் தம் உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சமான மனோநிலைக்கு வந்தனர்.
இவ்வாறாக சாத்தியமாகக்கூடிய ஒரு தீர்வை சாத்தியமற்றதாக்கியது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக மாற்றிய மாபெரும் வரலாற்றுத் துரோகமொன்றைச் செய்தனர் பிரபாகரனும், பொட்டனும். 1991 மே மாதம் 21ந் திகதி தமிழக மண்ணில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டின் மூலம் படுகொலை செய்து தமிழ் மக்களின் கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய இந்தியாவையும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இருந்து ஒதுங்கச் செய்தனர். ராஜீவ் காந்தியின் படுகொலை தனிஈழக் கனவிற்கு சாவுமணி அடித்தது என்றால் அது தவறில்லை.
மக்கள் ஆதரவும், கவர்ச்சிகரத் தன்மையும் மிக்க அடையக்கூடிய ஒரு தீர்வை நோக்கிய போராட்டத்தை தம் சுயஅதிகார மோகத்திற்காக பல்லாயிரம் உயிர்களை இழந்ததுடன் பலஇலட்சம் மக்களை அகதிகளாக்கியதனால் ஈழத்தை நோக்கிய போராட்டம் வெற்றிபெற்றதா?
ஆனாலும் 1995ம் ஆண்டுகளுக்கு பின் பெறப்பட்ட மாபெரும் இராணுவ வெற்றிமூலம் சிலவேளைகளில் தனிஈழம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர்த்தது. பூநகரி, ஆனையிறவு, ஜெயசிகுறு எதிர்ப்புச்சமர் போன்ற வியக்கத்தகு இராணுவ வெற்றிகள் மீண்டும் தனிஈழக் கனவைப் புதுப்பித்தது. ஆனால் 2004ம் ஆண்டு எமதுதலைவர் கருணாஅம்மானும், எமது கிழக்குப் போராளிகளும் பிரபாகரனின் பாசிச அடக்குமுறையை எதிர்த்து வெளியேற தனிஈழம் அன்று செல்லாக் காசானது. இனியும் ஈழம் என்று மக்களை ஏமாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
ஆக சாத்தியமாகாத ஒன்றைக் கூறி மக்களை ஏமாற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அதனைவிட ஈழம் என்பது வடக்கு, கிழக்கு என தனது வரையறையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் தமது அரசியற் பிரவேசத்திற்கான காரணங்களாக இலங்கையிலுள்ள தமிழ்ப் புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் அழிக்கப்பட்டதாலும் மேலும் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அச்சுறுத்தப்பட்டதாலும் அரசியல் வெற்றிடமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறான நிலையில் எமது செயற்பாடுகளை ஈழம் என்று வரையறுத்து செயற்பட முடியாது.
ஈழம் எனும்போது முஸ்லிம், சிங்கள மக்கள் தம்மை அதிலிருந்து வேறுபடுத்தியே பார்க்கின்றனர். கிழக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம், சிங்கள மக்களும் சேர்ந்து வாழ்கின்றனர். அதுபோல மலையகம், மேலகம் பலஇடங்களில் மூவின மக்களும் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதோடு ஏனைய சகோதரஇன மக்களின் உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும். அம்மக்களின் நம்பிக்கையும் வெல்லப்பட வேண்டும். இதற்கு ஈழம் எனும் வரையறை பொருத்தமாக அமையாது.
எனவே அனைத்து இன மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையுடனும், புரிந்துணர்வுடனும் நிம்மதியாக வாழ வேண்டும். வடகிழக்கில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் உறுதிசெய்யப் படுவதுடன் அங்கு ஏனைய சகோதர இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு அவர்களும் அங்கு அச்சமின்றி வாழவேண்டும். இப்புரிந்துணர்வும், நம்பிக்கையும் வடகிழக்கைத் தாண்டி முழுநாட்டிலும் பிரதிபலிக்க வேண்டும். அதற்கானதொரு மிகச் சிறந்த ஆரம்பமே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உருவாக்கமாகும்.