ஜே.வி.பியின் புலமைச் சொத்துக்களை வீரவன்ச திருடியுள்ளார் -ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

Read Time:1 Minute, 45 Second

ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சியை ஆரம்பித்த விமல் வீரவன்ச ஓர் புலமைச்சொத்துடன் திருடன் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் கொழும்பு நூகச்சேவை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார் விமல் வீரவன்சவினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள நூலின் பெயர் உண்மைக்கு பதிலாக பொய் என்று பெயரிடப்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஆவணங்கள் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூட்டம் முடிவடைந்தவுடன் அந்த ஆவணங்கள் மீண்டும் கட்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் ஜே.வி.பியின் இரகசிய ஆவணங்களை களவாடி அவற்றில் சிலவற்றை மாத்திரம் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் இந்த ஆவணங்கள் தனிப்பட்ட ஒருவரது உடமை அல்ல எனவும் அவை அனைத்தும் கட்சியின் சொத்துக்கள் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது
Next post முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!