பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எளிய தற்காப்பு முறைகள்..!!

Read Time:4 Minute, 22 Second

ஆண்களால் சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் பெண்கள் எளிதில் சாதித்து காட்டுகிறார்கள். பெண்கள் தங்களுடைய சாதனைகள் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர்.

ஆனால் பெண்கள் எவ்வளவு தான் சாதித்தாலும் அவர்களுக்கு எதிரான உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எனவே பெண்கள் தங்களை ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து காத்துக்கொள்ள ஒரு சில அடிப்படையான தற்காப்பு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த காலத்தில் பெண்கள் வேலைக்காகவும் உயர் கல்விக்காகவும் தங்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு நகரங்களுக்கு வந்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து அலுவலகங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்லும்போது மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சாலைகள் வழியாக செல்வது அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

பெண்கள் வெளியே செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர் உங்களை பின் தொடர்வதாக உணர்ந்தால் அவரிடம் இருந்து எப்போதும் சற்றே விலகியிருங்கள். அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ஆபத்து வந்தால் அதாவது அவர் உங்களை அத்துமீறி தொட்டாலோ அல்லது தாக்கினாலோ நீங்கள் பயப்படாமல் அவரை எதிர் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று உங்கள் எதிரிக்கு தெரிந்தால் அதுவே அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

மேலும் அவர் உங்களை தாக்கினால் உங்கள் கரங்களால் அவரை பிடித்து தள்ளிவிடுங்கள். மேலும் உங்களை விட்டு தொலைவில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு உங்களால் முடிந்த அளவு சத்தமாக கத்தி கூச்சலிடுங்கள் அதானால் உங்களை தாக்குபவர் கண்டிப்பாக பயப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

நீங்கள் எங்கேயாவது தனியாக வெளியே செல்லும்போதோ அல்லது எதிர்பாராத விதமாக தனியாக யாரிடமாவது மாட்டிக்கொண்டாலோ அவர் உங்களை தாக்க முற்படும்போது உங்களிடன் ஏதேனும் ஆயுதமோ அல்லது பொருளோ இல்லையென்றால் நீங்கள் முந்திக்கொண்டு உங்கள் உள்ளங்கையால் உங்கள் எதிரியின் மூக்கில் ஓங்கி அடிக்கலாம். அதன் மூலம் நீங்கள் அவரிடமிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

அடையாளம் தெரியாத நபர் உங்களைத் தாக்க வரும்போது உங்களிடம் இருக்கும் சாவிக்கொத்து, குடை, வாட்டர் கேன், சீப்பு, பேனா போன்ற எதையாவது வைத்து தாக்கலாம்.

பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு யாராவது உங்களை தாக்க வந்தால் வீட்டில் இருக்கும் கத்தி, கனமான தடி, அல்லது பிளாஸ்டிக் பைப், அல்லது மிளகாய் பொடி, மிளகு பொடி போன்றவற்றையே உங்களை தற்காத்துக்கொள்ளும் ஆயுதமாக பயன்படுத்தலாம்.

மேலும் பெண்களுடைய ஹண்ட் பேக்கில் (Hand bag) சிறிய கத்தி, பேனா, Tool kit, Cables, மிளகாய் பொடி, மிளகு பொடி போன்ற முக்கியமான பொருட்களை வைத்திருப்பது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 வயதைக் கடந்தவர்களும் திருப்தியான உடலுறவு கொள்ள டிப்ஸ்..!!
Next post நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை..!!