அட்வென்சர் படத்தில் நடிக்கும் மாதவன்..!!
இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நம்பிக்கையில் இருக்கும் சிறந்த நடிகரான மாதவன், இயக்குனர் சற்குணம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் பல்வேறு அழகான இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க’ படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார். ‘மஞ்சப்பை’, நயன்தாராவின் ‘டோரா’ படங்களை தன் பேனர் மூலம் தயாரித்த இயக்குனர் சற்குணம், இந்த படத்தை இயக்குவதோடு இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இது குறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது, “இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது, தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 மற்றும் ட்ராகுலா அண்டோல்டு படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார்.
இது வேதாளம் சொல்லும் கதை படத்தின் இயக்குனர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம். இது ஒரு குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகும். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating